சிவனொளிபாதமலை யாத்திரையின் போது பல்வேறு வகைப் போதைப் பொருட்களுடன் பயணித்த 31 பேர் கைது செய்யப்பட்டு பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த சந்தேக நபர்கள் ஹட்டன் நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டதன் பின்னர் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.
கொழும்பு உள்ளிட்ட நாட்டின் பல பகுதிகளைச் சேர்ந்த 20 முதல் 45 வயதுக்கு இடைப்பட்டவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
சிவனொளிபாதமலை யாத்திரையின் போது போதைப் பொருட்களுடன் பயணிப்பவர்களைக் கைது செய்வதற்காக ஆரம்பிக்கப்பட்ட நடவடிக்கைக்கு அமைய, பொல்பிட்டிய, மஸ்கெலியா மற்றும் நல்லதண்ணி ஆகிய பகுதிகளில் பொலிசார் விசேட சோதனை நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Link: https://namathulk.com