சொத்து குத்தகை அல்லது வாடகை ஒப்பந்தங்களுக்கான முத்திரை வரியை 100 சதவீதமாக அதிகரிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
ஏப்ரல் மாதம் முதலாம் திகதி முதல் குறித்த கட்டண அதிகரிப்பு அமுலுக்கு வரும் என்று நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.
எந்தவொரு சொத்தையும் குத்தகைக்கு எடுக்கும்போது அல்லது வாடகைக்கு விடும்போது, ரூ. முத்திரை வரியாக செலுத்த வேண்டும்.
இதன்படி, குறித்த முத்திரை வரியை 100 ரூபாவாக அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பான, வர்த்தமானி அறிவிப்பை நிதி அமைச்சர், ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க வெளியிட்டுள்ளார்.
2006 ஆம் ஆண்டுக்குப் பிறகு இந்த முத்திரை வரி திருத்தப்படுவது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.