யாழ்ப்பாணத்திற்கும் திருச்சிக்கும் இடையிலான விமான சேவை இன்று முதல் தொடங்கவுள்ளது.
இண்டிக்கோ விமான சேவையினரால் நடாத்தப்படவுள்ள இந்த விமான சேவை திருச்சியில் இருந்து மதியம் 01.25க்கு புறப்பட்டு, யாழ்ப்பாண சர்வதேச விமான நிலையத்தை மாலை 02.25 மணிக்கு வந்தடையும்.
யாழ்ப்பாணத்தில் இருந்து மாலை 03.10 மணிக்கு புறப்படும் விமானம், திருச்சி விமான நிலையத்தை மாலை 04.05 மணிக்கு சென்றடையும் என விமான சேவை நிறுவனம் அறிவித்துள்ளது.
Link: https://namathulk.com