மட்டக்களப்பு மாவட்ட சமாதான நீதிவான்கள் சமூக மேம்பாட்டு மையத்தின் செயற்பாடுகளை மாவட்டம் முழுவதும் இலகுவாக விஸ்தரிப்பதற்கான செயற்பாடுகளை முன்னெடுக்கும் நோக்கில் பிரதேச செயலக ரீதியாக இணைப்பாளர்களை தெரிவு செய்யும் விசேட கூட்டம் நேற்று மட்டக்களப்பு கொக்கட்டிச் சோலையில் இடம் பெற்றது.
மட்டக்களப்பு மாவட்ட சமாதான நீதிவான்கள் சமூக மேம்பாட்டு மையத்தின் புதிய நிர்வாகம் கடந்த 2025 ஆண்டு தை மாதம் பொறுப்பேற்றதனைத் தொடர்ந்து பல்வேறுபட்ட முன்னேற்றகரமான செயற்பாடுகளை முன்னெடுத்து வந்ததது.
இந்நிலையில், பிரதேச செயலக ரீதியாக இணைப்பாளர்களை நியமனம் செய்யும் இரண்டாவது விசேட கூட்டம் பட்டிப்பளை பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் அகில இலங்கை சமாதான நீதிவானும் மட்டக்களப்பு மாவட்ட சமாதான நீதிவான்கள் சமூக மேம்பாட்டு மையத்தின் தலைவருமான சாமஸ்ரீ தேசமானிய உ.உதயகாந்த் தலைமையில் இடம்பெற்றது.
மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனை தென் மேற்கு மற்றும் மண்முனை மேற்கு ஆகிய பிரதேச செயலக பிரிவுகளிற்கான இணைப்பாளர்கள் தெரிவு இதன்போது இடம்பெற்றது.
சமாதான நீதிவான்களுக்குள்ள இடர்பாடுகளை தீர்ப்பது, 10 வருடத்திற்கு மேல் மாவட்ட சமாதான நீதிவான்களாக கடமையாற்றும் சமாதான நீதிவான்களுக்கு முழு தீவிற்குமான சமாதான நீதிவான் நியமனத்தை சங்கத்தின் ஊடாக பெற்றுக்கொடுத்தல், சமூக நலத்திட்டங்களை அமுல்படுத்துவது தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது.
Link: https://namathulk.com