மாத்தளை, சுதுகங்கை வனப்பகுதியில் ஒரு சூட்கேஸில் மறைத்து வைக்கப்பட்டிருந்த வு56 துப்பாக்கி மற்றும் இரண்டு தோட்டாக்களை பொலிசார் கண்டுபிடித்துள்ளனர்.
பொலிசாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் நடத்திய சோதனையின்போது, இரண்டு சூட்கேஸ்களில் இந்த துப்பாக்கி மற்றும் வெடிமருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டன.
இந்த துப்பாக்கிகள் மற்றும் வெடிமருந்துகளை சுதுகங்கை வனப்பகுதியில் மறைத்து வைத்த சந்தேக நபர்களைக் கைது செய்ய பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Link: https://namathulk.com