மியான்மாரில் இன்றையதினம் மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
குறித்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 5.1 மெக்னிடியுட்டாக புதிவானதாக அமெரிக்க நிலநடுக்கவியல் மையம் தெரிவித்துள்ளது.
கடந்த வெள்ளிக்கிழமை ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து ஏற்பட்ட தொடர்ச்சியான நிலநடுக்கங்களில் இதுவும் ஒன்றாகும்.
இன்று ஏற்பட்ட நிலநடுக்கத்தை தொடர்ந்து வீதிகளில் பொதுமக்கள் தஞ்சமடைந்ததாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
முன்னதாக கடந்த வெள்ளிக்கிழமை மியான்மாரில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தையடுத்து இதுவரை, 1,600 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாகவும், 3,400 க்கும் மேற்பட்டோர் காணாமல் போனதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் குறித்த நிலநடுக்கத்தால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என அந்நாட்டு அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
Link: https://namathulk.com