பட்டலந்த வதை முகாம் மட்டுமல்ல பல வதைமுகாம்கள் இருந்தன. அவை தொடர்பில் விசாரணைகள் இடம்பெறும் என போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.
வவுனியா, குடியிருப்பு பகுதியில் நேற்று தேசிய மக்கள் சக்தியின் உள்ளுராட்சி மன்ற வேட்பாளர்களை சந்தித்து கலந்துரையாடிய பின் இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இதனை கூறினார்.
இதன்போது, அரசியல் கைதிகளை விடுவிக்க முடியும். ஆனால் அதனை உடனடியாக செய்ய முடியாது எனவும் அமைச்சர் வலியுறுத்தினார்.
தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வந்து நான்கு மாதங்கள் தான் ஆகியுள்ள நிலையில், ஜனாதிபதிக்கு அதிகாரங்கள் இருந்தாலும் அதனை படிப்படியாகதான் மன்னனெடுக்க முடியும் எனவும் அமைச்சர் கூறினார்.
வடக்கின் கைத் தொழிற்சாலைகளை மீள இயங்கு நிலைக்கு கொண்டு வந்துள்ளதோடு, அரசாங்கத்தின் வரவு செலவுத் திட்டத்தில் முன்னைய அரசாங்கங்கள் ஒதுக்காத அளவு அதிக நிதியை வடக்கிற்கு ஒதுக்கியுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
ஆகவே, நடைமுறைகளின் பிரகாரம் அரசியல் கைதிகள் விடுவிக்கப்படுவர் என அமைச்சர் குறிப்பிட்டார்.
அதேவேளை, வதை முகாம்கள் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்படும் எனவும் தமிழ், சிங்கள, முஸ்லிம் மக்கள் என எல்லோருமே பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அமைசர் தெரிவித்தார்.
Link: https://namathulk.com