இந்தியன் ப்ரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் 10ஆவது போட்டியில் டெல்லி கெப்பிடல்ஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது.
விசாகப்பட்டினத்தில் இன்று (30) நடைபெற்ற குறித்த போட்டியில் டெல்லி கெப்பிடல்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் ஆகிய அணிகள் மோதின.
இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி முதலில் துடுப்பாட்டத்தில் ஈடுபட தீர்மானித்தது.
இதற்கமைய ஹைதராபாத் அணி 18.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 163 ஓட்டங்களைப் பெற்றது.
164 ஓட்டங்கள் எனும் வெற்றி இலக்குடன் களமிறங்கிய டெல்லி கெப்பிட்டல்ஸ் அணி
16 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 166 ஓட்டங்களைப் பெற்றது.
இதன்மூலம், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் டெல்லி கெப்பி;டல்ஸ் அணி அபாரமாக வெற்றி பெற்றுள்ளது.
link: https://namathulk.com