இஸ்ரேல் உடனான போரை தற்காலிகமாக நிறுத்துவதற்கு ஹமாஸ் அமைப்பு ஒப்புதல் தெரிவித்துள்ளது.
மேலும், 5 பணயக் கைதிகளை விடுவிப்பதாகவும் ஹமாஸ் அமைப்பு தெரிவித்துள்ளது.
இதற்கமைய இம்முறை சரியாக 50 நாட்களுக்கு போர் நிறுத்தம் அமுலில் இருக்கும் என தெரிவிக்கப்படுகின்றது.
ரமலான் பண்டிகையின் முடிவை குறிக்கும் ஈத் நிகழ்வு, சனிக்கிழமை இரவு தொடங்கி எதிர்வரும் புதன்கிழமை முடிவடைகிறது.
இந்நிலையில் ஹமாஸ் அமைப்பின் தலைவர் கலீல் அல்-ஹயா, இஸ்ரேல் உடனான போரை தற்காலிகமாக நிறுத்துவதற்கு ஒப்புதல் தெரிவிப்பதாக தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றின் போது தெரிவித்துள்ளார்.
ஹமாஸ் அமைப்பு ஆரம்ப போர் நிறுத்த ஒப்பந்தத்தின் விதிமுறைகளை “முழுமையாகக் கடைப்பிடித்துள்ளது” என்றும், இஸ்ரேல் “இந்த திட்டத்தைத் தடுக்காது” என்று நம்பிக்கை தெரிவித்ததாகவும் அல்-ஹயா கூறியுள்ளார்.
இதேவேளை எகிப்து அறிவித்த போர் நிறுத்த ஒபந்தத்திற்கு இஸ்ரேல் ஒரு எதிர் திட்டத்தை சமர்ப்பித்துள்ளதாக இஸ்ரேலிய பிரதமர் அலுவலகம் உறுதிப்படுத்தியுள்ளது.
Link: https://namathulk.com