அம்பலாந்தோட்டை – கொக்கல்ல பகுதியில் இன்று (31) அதிகாலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் காயமடைந்துள்ளதாக காவல்துறை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
குறித்த பகுதியில் வீடொன்றிலிருந்த நபரொருவர் மீது, மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் இவ்வாறு துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டுத் தப்பிச் சென்றுள்ளதாகத் தெரியவந்துள்ளது.
சம்பவத்தில் காயமடைந்த நபர் சிகிச்சைகளுக்காக ஹம்பாந்தோட்டை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கொக்கல்ல பகுதியைச் சேர்ந்த 30 வயதுடைய ஒருவரே இவ்வாறு காயமடைந்துள்ளார்.
குறித்த நபருக்கும் மற்றுமொரு தரப்பினருக்கு இடையில் நிலவிவந்த தனிப்பட்ட முரண்பாடு காரணமாக இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
Link : https://namathulk.com