ஈரான் தனது அணுசக்தி திட்டம் தொடர்பாக வொஷிங்டனுடன் ஒரு உடன்பாட்டிற்கு வரவில்லை என்றால், குண்டுவீச்சு மற்றும் இரண்டாம் நிலை வரிகளை விதிக்க நேரிடும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஈரானை எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கடந்த வாரம் வொஷிங்டனுடனான நேரடி பேச்சுவார்த்தைகளை ஈரான் நிராகரித்ததையடுத்து பேசிய ட்ரம்ப், ரஷ்யா மற்றும் ஈரான் ஆகிய இரு நாடுகளின் பொருட்களையும் வாங்குபவர்களைப் பாதிக்கும் வகையில் இரண்டாம் நிலை வரிகள் விதிக்க நேரிடும் என குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை ரஷ்ய எண்ணெய் மீது 25 சதவீதம் முதல் 50 சதவீதம் வரை இரண்டாம் நிலை வரிகளை விதிப்பதாக அச்சுறுத்தும் அறிக்கை ஒன்றை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் வெளியிட்டுள்ளார்.
ஒரு மாதத்திற்குள் யுக்ரைன் போர் நிறுத்த ஒப்பந்தத்திற்கு ரஷ்ய ஜனாதிபதி விளாடிமின் புடின் உடன்படவில்லை என்றால், ரஷ்ய எண்ணெய் மீது வரிகளை விதிப்பதாக ட்ரம்ப் கூறியுள்ளார்.
இந்த விடயத்தில் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமின் புடின் மீதும் டொனால்ட் டிரம்ப் தனது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார்.
Link : https://namathulk.com