உள்நாட்டு சுற்றுலாப் பயணிகளை ஊக்குவிக்க உள்நாட்டு விமானங்களை விஸ்தரிப்பதற்கான திட்டங்கள் நடைபெற்று வருவதாக போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.
யாழ்ப்பாணம் பலாலி சர்வதேச விமான நிலையத்தின் சுற்றுப்பயணத்தில் பங்கேற்றபோதே அவர் இதனை கூறினார்.
அதற்கேற்ப தேவையான சட்டங்களைத் திருத்துவதற்குத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
அதற்கமைவாக, கட்டுநாயக்காவில் உள்ள பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து பலாலி யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்திற்கு உள்நாட்டு விமானங்களை அதிகரிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் கூறினார்.
Link : https://namathulk.com