மியான்மரில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக, ராணுவம் உள்ளிட்ட மருத்துவ குழுவை அங்கு அனுப்புமாறு முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள சிறப்பு அறிக்கையிலேயே இதனை கூறியுள்ளார்.
மியான்மருக்கும் இலங்கைக்கும் இடையே நெருங்கிய உறவுகள் இருப்பதாகவும், அந்த நாட்டில் வாழும் மக்களுக்கு நிவாரணம் வழங்க மருந்துகள் உள்ளிட்ட மருத்துவ ஊழியர்களை அனுப்புமாறு முன்னாள் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
2015 ஆம் ஆண்டு நேபாளத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டபோது, இராணுவக் குழுவை அனுப்பியதாக சுட்டிக்காட்டிய முன்னாள் ஜனாதிபதி, இந்தியாவிற்குப் பிறகு இலங்கை இரண்டாவது பெரிய நன்கொடையாளராக இருந்ததாக தெரிவித்தார்.
அத்துடன், கடந்த ஆட்சிக்காலத்தில், காசாவிற்கு இலங்கையிலிருந்து ஒரு மில்லியன் டொலர்கள் வழங்கப்பட்டதாகவும் முன்னாள் ஜனாதிபதி நினைவுக்கூர்ந்தார்.
அதுபோலவே, மியன்மாருக்கு உதவவும் அரசாங்கம் முன்வர வேண்டுமென முன்னாள் ஜனாதிபதி தெரிவித்தார்.
Link : https://namathulk.com