இலங்கை தமிழரசுக்கட்சியின் ஸ்தாபக தலைவர் தந்தை செல்வாவின் 127வது ஜனனதினம் இன்று மட்டக்களப்பில் அனுஸ்டிக்கப்பட்டது.
இதன்போது, தந்தை செல்வாவின் சிலைக்கு ஈகச்சுடர் ஏற்றி மலரஞ்சலி செலுத்தப்பட்டதுடன் அகவணக்கமும் செலுத்தப்பட்டது.
தந்தை செல்வா தமிழர்களின் இடர்களை அறிந்து சாத்வீக முறையில் அகிம்சைப் பாதையில் தமிழர்களின் சுதந்திரத்தை வென்றெடுக்க வேண்டும் என தமது வாழ்நாளில் அதிக காலத்தை அர்ப்பணித்தார் என பாராளுமன்ற உறுப்பினர் கூறினார்.
ஜனாதிபதி எதிர்வரும் ஏப்ரல் 21ஆம் திகதிக்குள் ஈஸ்டர் தாக்குதல் சூத்திரதாரிகள் பகிரங்கப்படுத்தப்படுவார்கள் என தெரிவித்தமையை பாராளுமன்ற உறுப்பினர் சுட்டிக்காட்டியதோடு, குறித்த வாக்குறுதியை ஜனாதிபதி நிறைவேற்ற வேண்டுமெனவும் வலியுறுத்தினார்.
Link : https://namathulk.com