சிறிலங்கா கிரிக்கெட் 2025–2027 காலகட்டத்திற்கான புதிய நிர்வாகிகளை நியமித்துள்ளது.
இதில் பல உறுப்பினர்கள் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
ஷம்மி சில்வா சிறிலங்கா கிரிக்கெட்டின் தலைவராக போட்டியின்றி தெரிவுச்செய்யப்பட்டுள்ளார்.
அத்துடன், 2025–2027 காலகட்டத்திற்கான பின்வரும் நிர்வாகிகள் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
தலைவர்: ஷம்மி சில்வா
துணைத் தலைவர்: ஜெயந்த தர்மதாச
துணைத் தலைவர்: ரவின் விக்ரமரத்ன
செயலாளர்: பந்துல திசாநாயக்க
பொருளாளர்: சுஜீவ கோடலியத்த
உதவிச் செயலாளர்: கிரிஷாந்த கப்புவத்தே
உதவிப் பொருளாளர்: லசந்த விக்ரமசிங்க
சிறிலங்கா கிரிக்கெட்டின் தேர்தல் இன்று தேர்தல் குழுவின் மேற்பார்வையில் நடைபெற்றது.
இதன்போது, ஓய்வுபெற்ற மேல்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி மாலனி குணரத்ன தலைமையில், கொழும்பில் நடைபெற்ற சிறிலங்கா கிரிக்கெட்டின் 64வது ஆண்டு பொதுக் கூட்டத்துடன் தேர்தல் நடைபெற்றது.
Link : https://namathulk.com