தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள சட்டத்தரணி பி.உதயங்கனியை உடனடியாக விடுதலை செய்யுமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டில் சட்டத்தரணி உதயங்கனி தடுப்புக்காவலில் வைக்கப்பட்டார்.
சட்டத்தரணி உதயங்கனி ஏப்ரல் 28 ஆம் திகதி மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் முன்னிலையாக வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் சட்டத்தரணி ரஜீவ அமரசூரிய தாக்கல் செய்த மனுவை விசாரித்த பின்னர், மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் பதில் தலைவர் நீதியரசர் மொஹமட் லாபர் தாஹிர் மற்றும் பிரியந்த பெர்னாண்டோ ஆகியோர் அடங்கிய நீதியரசர் அமர்வு இந்த உத்தரவைப் பிறப்பித்தது.
Link : https://namathulk.com