தென்னிலங்கையின் முக்கிய பாதாள பாதாள உலகக் குழு உறுப்பினர்களில் ஒருவரான ரொடும்ப அமில ரஷ்யாவில் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த 2019ஆம் ஆண்டு மாத்தறை ரொடும்ப பிரதேசத்தில் வர்த்தக நிலைய உரிமையாளர் ஒருவரை துப்பாக்கியால் சுட்டுப் படுகொலை செய்தமை உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் இவருக்கு எதிராக நிலுவையில் உள்ளன.
குறித்த வழக்குகளில் இருந்து நீதிமன்றத்தின் ஊடாக பிணையில் வெளிவந்த ரொடும்ப அமில எனப்படும் ரத்நாயக்க அமில சம்பத், ஒரு கட்டத்தில் நாட்டை விட்டும் ரகசியமாக தப்பிச் சென்றிருந்தார்.
இந்நிலையில் நேற்றைய தினம் அவர் ரஷ்யாவில் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
ரஷ்ய அதிகாரிகள் இந்த விடயம் குறித்து இலங்கையின் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்துக்கு உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளனர்.
Link : https://namathulk.com