இலங்கை ஆயுதப்படைகளின் முன்னாள் தலைவர் சவேந்திர சில்வாவை ஆதரித்து, முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா, பிரித்தானியாவின் சமீபத்திய தடைகள் நியாயமற்றவை என தெரிவித்தார்.
ஒரு பொது நிகழ்வில் உரையாற்றிய போதே அவர் இதனை கூறினார்.
போரின் போது கொலைகள், மனித உரிமை மீறல்கள், அதிகார துஷ்பிரயோகம் எதுவும் நடக்கவில்லை என்பதோடு, சவேந்திர சில்வாவுக்கு எதிரான தடைகள் நியாயமற்றவை என சரத் பொன்சேகா சுட்டிக்காட்டினார்.
அத்துடன், முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கரன்னாகொட மற்றும் முன்னாள் இராணுவத் தளபதி ஜகத் ஜெயசூரிய ஆகியோருக்கு எதிரான தடைகள் நியாயமானவை எனவும் சரத் பொன்சேகா கூறினார்.
மேலும், இவர்கள் இராணுவ அதிகாரங்களை துஷ்பிரயோகம் செய்ததற்கான முக்கிய ஆதாரங்கள் இருப்பதாகவும் சரத் பொன்சேகா தெரிவித்தார்.
Link : https://namathulk.com