மன்னார் காற்றாலை மின் உற்பத்தி நிலையத்திற்கான மின்சார கொள்முதல் ஒப்பந்தத்தை, அரசாங்கம் முன்மொழியப்பட்ட விலைக்கு ஒப்புக் கொள்ளாவிட்டால், தனது அரசாங்கம் குறித்த ஒப்பந்தத்தை தொடராது என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.
தேசிய மக்கள் சக்தி தேர்தல் பேரணியில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறினார்.
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அதானி குழுமத்துடனான ஒப்பந்தத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்தியதை தான் பார்த்ததாக கூறிய ஜனாதிபதி, அவர்கள் அரசாங்கத்தின் நிபந்தனைக்கு ஒப்பக்கொள்ளாவிட்டால் ஒப்பந்தம் கைவிடப்படும் எனவும் குறிப்பிட்டார்.
Link : https://namathulk.com