பேராதனை – எடதுவாவ பகுதியில் முச்சக்கர வண்டியொன்று இன்று (31) காலை கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
இந்த விபத்தில் 2 பேர் உயிரிழந்ததாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
மேலும் விபத்தில் காயமடைந்த 2 பேர் பேராதனை வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விபத்து தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பேராதனை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.
Link : https://namathulk.com