ரமழான் நோன்பு பெருநாள் இன்று கொண்டாடப்படுகின்றது.

Aarani Editor
1 Min Read
ரமழான் நோன்பு

இலங்கை வாழ் இஸ்லாமியர்களினால் ரமழான் பண்டிகை இன்று கொண்டாடப்படுகிறது.

உப பிறைக் குழுக்களின் அறிக்கையின் படி, 2025 மார்ச் 30 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை இரவு ஹிஜ்ரி 1446 ஷவ்வால் மாதத்தின் தலைப்பிறை தென்பட்டுள்ளது.

அந்தவகையில், 2025 மார்ச் 31 ஆம் திகதி திங்கட்கிழமை ஹிஜ்ரி 1446 ஷவ்வால் மாதத்தின் 01 ஆம் பிறை என கொழும்பு பெரிய பள்ளிவாசல், அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் பிறைக் குழு மற்றும் முஸ்லிம் சமய பண்பட்டலுவல்கள் திணைக்களம் ஆகியன அறிவித்துள்ளது.

அந்த அறிவிப்புக்கு அமைவாக ஒரு மாத நோன்பு முடிவடைந்தை தொடர்ந்து தலைப்பிறை தரிசனத்துடன், இஸ்லாமியர்கள் ஈதுல் பித்ர் பெருநாள் அல்லது ரமழான் தினத்தை கொண்டாடுகிறார்கள்.

இதேவேளை, ரமழான் பண்டிகையை முன்னிட்டு நாடு முழுவதும் உள்ள முஸ்லிம் பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்க கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.

இந்த விடுமுறை நாளுக்கான கல்வி நடவடிக்கைகள் மற்றொரு திகதிகயில் அறிவிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இஸ்லாத்தின் ஐந்து கடமைகளில் ஒன்றான ரமழான் மாத நோன்பு, உலக ஆசைகளிலிருந்து தூரமாகி, அர்ப்பணிப்பு மற்றும் எளிமையுடனான முன்மாதிரி நடைமுறையை நிலைநிறுத்துவதன் முக்கியத்துவத்தை பிரதிபலிக்கிறது.

உலகெங்கிலும் பசியால் வாடும் மக்களுக்கு தானதருமம் செய்யவும், உள்ளத்தை கட்டுப்படுத்தும் திறனை வளர்த்துக் கொள்ளவும், இந்த மாதம் ஒரு சிறந்த வாய்ப்பாக முஸ்லிம்கள் கருதுகின்றனர்.

ரமழான் மாதத்தில், முஸ்லிம்கள் விடியலுக்கும் சூரிய அஸ்தமனத்திற்கும் இடையில் உணவு உண்ணவோ, நீர் அருந்தவோ மாட்டார்கள்.

Link : https://namathulk.com

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *