இந்தியன் ப்ரிமியலீக் கிரிக்கெட் தொடரில் நேற்று இடம்பெற்ற 11ஆவது போட்டியில் சென்னை அணியை வீழ்த்தி ராஜஸ்தான் ரோஜல்ஸ் அணி தனது முதல் வெற்றியை பதிவு செய்தது.
நேற்றைய போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ரோயல்ஸ் ஆகிய அணிகள் மோதின.
நாணய சுழற்சியில் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பந்துவீச்சை தெரிவு செய்தது.
அதன்படி, முதலில் களமிறங்கிய ராஜஸ்தான் ரோஜல்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 182 ஓட்டங்களைப் பெற்றது.
நிதிஷ் ரானா அதிரடியாக ஆடி 81 ஓட்டங்களைக் குவித்தார்.
சென்னை சூப்பர் கிங்ஸ் சார்பில் கலீல் அகமது, நூர் அகமது மற்றும் பதிரன ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்களை வீழ்த்தினர்.
இதையடுத்து, 183 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி களமிறங்கியது.
அணித்தலைவர் ருதுராஜ் 63 ஓட்டங்களையும் ஜடேஜா 32 ஓட்டங்களையும் டோனி 16 ஓட்டங்களையும் அணிக்காகப் பெற்றுக் கொடுத்தனர்.
இறுதியில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 176 ஓட்டங்களை மாத்திரமே எடுத்தது.
இதன்மூலம் 6 ஓட்டங்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ரோஜல்ஸ் அணி வெற்றி பெற்றது.
ராஜஸ்தான் ரோஜல்ஸ் அணி சார்பில் வனிந்து ஹசரங்க 4 விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.
Link : https://namathulk.com