மூன்று ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்கவை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதம நீதவான் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது.
அரச வங்கியில் வைத்திருந்த நிலையான வைப்புத்தொகையை திரும்பப் பெற்றதன் மூலம் அரசாங்கத்திற்கு 23 மில்லியன் ரூபா இழப்பை ஏற்படுத்தியதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் வாக்குமூலம் வழங்கிய பின்னர் கடந்த 27 ஆம் திகதி சாமர சம்பத் தசநாயக்க கைது செய்யப்பட்டார்.
முன்னாள் இராஜாங்க அமைச்சராக இருந்த காலத்தில் இடம்பெற்றதாக கூறப்படும் 03 ஊழல் சம்பவங்கள் தொடர்பிலேயே அவர் கைது செய்யப்பட்டார்.
அதற்கமைய கொழும்பு பிரதம நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர், இரண்டு குற்றச்சாட்டுகளிலிருந்து விடுவிக்கப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க, ஒரு ஊழல் குற்றச்சாட்டில் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.
Link: https://namathulk.com