தமிழ் – சிங்கள புத்தாண்டை முன்னிட்டு அரசாங்கத்தால் சலுகை விலையில் வழங்கப்படும் அத்தியாவசிய உணவுப் பொருட்கள் அடங்கிய உலருணவுப் பொதிகள் இன்று (01) முதல் வழங்கப்படுகின்றது.
நாடு பூராகவுமுள்ள லங்கா சதொச விற்பனை நிலையங்கள் மற்றும் COOPFED விற்பனை நிலையங்களினூடாக இந்த உலருணவுப் பொதியைப் பெற்றுக்கொள்ளலாம்.
அதன்படி, 5,000 ரூபா பெறுமதியான அத்தியாவசிய உணவுப் பொருட்கள் அடங்கிய உலருணவுப் பொதியை 2,500 ரூபாவுக்கு வழங்க திட்டமிடப்பட்டது.
இந்த உலருணவுப் பொதிகளை இன்று (01) முதல் எதிர்வரும் 13ஆம் திகதி வரை பெற்றுக்கொள்ளலாம் என அரசாங்கம் அண்மையில் அறிவித்திருந்தது.
Link: https://namathulk.com