வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டதை ஆட்சேபனைக்கு உட்படுத்தி மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ள பகுதிகளில் உள்ளூராட்சி தேர்தல்களை நடத்துவது தொடர்பான நடவடிக்கைகளை இடைநிறுத்துமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் தேர்தல் அதிகாரிகளுக்கு இன்று உத்தரவிட்டுள்ளது.
நாளை வரை குறித்த செயற்பாடுகளை இடைநிறுத்துமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டமையை ஆட்சேபித்து அரசியல் கட்சிகள் மற்றும் சுயாதீன குழுக்கள் தாக்கல் செய்த பல மனுக்களை பரிசீலித்த பின்னர், மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் பதில் தலைவர் நீதிபதி முகமது லாபர் தாஹிர் மற்றும் நீதிபதி கே.பி. பெர்னாண்டோ ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த உத்தரவை பிறப்பித்தது.
கொழும்பு மாநகர சபை உட்பட பல உள்ளூராட்சி நிறுவனங்களுக்கான வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டதை எதிர்த்து ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணி , உட்பட பல கட்சிகளால் மனுக்கள் சமர்ப்பிக்கப்பட்டன.
Link: https://namathulk.com