அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அடுத்த மாதம் ஐக்கிய அரபு இராச்சியத்திற்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
1 டிரில்லியன் டொலர்களை அமெரிக்க நிறுவனங்களில் முதலீடு செய்ய உள்ளதாக சவுதி அரேபிய அரசு தெரிவித்திருந்த நிலையிலேயே டொனால் ட்ரம்பின் பயண அறிவிப்பு வெளியாகியுள்ளது.
அமெரிக்காவின் ஓவல் அலுவலகத்தில் நடந்த நிர்வாக உத்தரவுகளில் கையெழுத்திடும் விழாவில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அடுத்த மாதம் கட்டார், ஐக்கிய அரபு இராச்சியம் மற்றும் சவுதி அரேபியாவுக்குச் செல்லும் திட்டத்தை தெரிவித்தார்.
பாதுகாப்பு, வர்த்தகம் மற்றும் பயங்கரவாத எதிர்ப்பு போன்ற துறைகளில் வளைகுடா நட்பு நாடுகளுடன் அமெரிக்க உறவுகளை வலுப்படுத்துவதே இப் பயணத்தின் நோக்கமாகும்.
Link: https://namathulk.com