இன்று பல மாகாணங்களில் சுமார் 100 மில்லிமீற்றர் வரையான பலத்த மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
இன்று முதல் அடுத்த சில நாட்களுக்கு நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பிற்பகல் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என திணைக்களம் அறிவித்துள்ளது.
மத்திய, சப்ரகமுவ, மேற்கு, தெற்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும், குருநாகல் மற்றும் பொலன்னறுவை மாவட்டங்களிலும் சில இடங்களில் சுமார் 100 மி.மீ. வரையான கனமழை பெய்யக்கூடும்.
இடியுடன் கூடிய மழை பெய்யும் போது தற்காலிகமாக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கம் ஏற்படக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் ஏற்படக்கூடிய சேதங்களைக் குறைக்க போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
இதேவேளை, புத்தளம் முதல் கொழும்பு, காலி, ஹம்பாந்தோட்டை மற்றும் மட்டக்களப்பு ஊடாக திருகோணமலை வரையிலான கரையோர பகுதிகளில் மாலை அல்லது இரவில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.
தீவைச் சுற்றியுள்ள கடல் பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்யும் போது தற்காலிகமாக பலத்த காற்று வீசும். அதன்போது குறித்த கடற்பகுதி மிகவும் கொந்தளிப்பாக இருக்கும்.
Link: https://namathulk.com