ஜூலை மாதத்தில் பஸ் கட்டணம் அதிகரிக்கப்படும் என இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே பஸ் சேவை நட்டத்தில் இயக்கப்படுவதாகவும் அவர் கூறியுள்ளார்.
அரசாங்கம் விதித்துள்ள புதிய வரி வீதத்தில் கீழ் பஸ்களின் விலைகளும் அதிகரித்துள்ளதாகவும், பஸ்களில் வற் வரியும் சேர்க்கப்பட்டுள்ளதாகவும், அதன்படி பஸ் கட்டண உயர்வு தவிர்க்க முடியாதது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
விரைவில் வருடாந்த பஸ் கட்டணம் திருத்தப்படவுள்ள நிலையில் ஜூலை மாதத்தில் பஸ் கட்டணம் நிச்சயமாக அதிகரிக்கும் என கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.
இந்த விடயம் தொடர்பில் போக்குவரத்து அமைச்சருக்கும் நேரடியாக அறிவித்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
Link: https://namathulk.com