அரச மற்றும் அரசினால் அங்கீகரிக்கப்பட்ட தனியார் பாடசாலைகளில் முதலாம் தவணையின் இரண்டாம் கட்டம் இன்று (01) ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
முதலாம் தவணையின் முதல் கட்டம் மார்ச் மாதம் 14 ஆம் திகதி நிறைவடைந்தது.
மார்ச் மாதம் 17 ஆம் திகதி ஆரம்பமான கல்வி பொதுத்தராதர சாதாரண தரப்பரீட்சை காரணமாக இந்த விடுமுறை வழங்கப்பட்டது.
இதேவேளை, நாட்டில் உள்ள சகல முஸ்லிம் பாடசாலைகளுக்கும் இன்றைய தினம் விசேட விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.
நோன்பு பண்டிகையை முன்னிட்டு இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டது.
இன்றைய நாளுக்கான கற்றல் செயற்பாடுகள் இடம்பெறும் திகதி பின்னர் அறிவிக்கப்படும் எனக் கல்வி அமைச்சு ஏற்கனவே அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Link: https://namathulk.com