மியன்மார் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்கான மருத்துவக் குழுவை அனுப்ப இலங்கை தயாராகவுள்ளது.
மியான்மர் அரசாங்கம் தேவையான அனுமதியை வழங்கியவுடன், பேரிடர் மீட்புப் பணியில் அனுபவம் வாய்ந்த விசேட வைத்தியர்கள், தாதியர்கள் உட்பட மருத்துவ நிபுணர்கள் குழு பணியில் ஈடுபடத் தயாராக இருப்பதாக சுகாதார அமைச்சர் டொக்டர் நளிந்த ஜெயதிஸ்ஸ தெரிவித்தார்.
களுத்துறையில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பேசிய அமைச்சர், இந்த நெருக்கடியின் போது மியன்மாரை ஆதரிப்பதற்கான இலங்கையின் உறுதிப்பாட்டை வலியுறுத்தினார்.
மியன்மாருக்கு அத்தியாவசிய மருந்துகள், மருத்துவ உபகரணங்கள் மற்றும் தேவையான ஏனைய பொருட்களை வழங்க அரசாங்கம் தீவிரமாக செயல்பட்டு வருவதாகவும் அமைச்சர் கூறியுள்ளார்.
Link: https://namathulk.com