தலவாக்கலை, மேல்கொத்மலை நீர்த்தேக்கத்திலிருந்து யுவதியொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பொது மக்கள் வழங்கிய தகவலுக்கு அமைய பொலிஸார் மற்றும் பொது மக்களின் உதவியுடன் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
டயகம, போட்மோர் பகுதியை சேர்ந்த 22 வயது யுவதியொருவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார் .
மீட்கப்பட்ட சடலம் விசாரணைகளின் பின் வைத்திய பரிசோதனைக்காக நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் காணாமல் போய் இருந்த நிலையில் குறித்த யுவதி சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
Link: https://namathulk.com