யாழ் பல்கலைக்கழக விஞ்ஞான பீட புதுமுக மாணவன் ஒருவரை பகிடிவதைக்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் நான்கு மாணவர்களுக்கு தற்காலிக வகுப்பு தடை விதிக்கப்பட்டுள்ளது.
பல்கலைக்கழக ஒழுக்காற்று குழுவின் தீர்மானத்திற்கு அமைய இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
விஞ்ஞான பீட புது முக மாணவன் ஒருவரை அதே பீடத்தைச் சேர்ந்த இரண்டாம் வருட மாணவர்கள் பகிடிவதை என்ற போர்வையில் வெளியில் உள்ள தனியார் விடுதிக்கு அழைத்து தாக்கியுள்ளனர்.
தாக்குதலுக்கு உள்ளான மாணவனின் செவிப்பறை பாதிக்கப்பட்டுள்ள நிலையில் யாழ் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த விடயம் தொடர்பில் பாதிக்கபபட்ட மாணவனின் தந்தை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவுக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.
தனது மகனுக்கு பல்கலைக்கழகத்தில் இழைக்கப்பட்ட அநீதி தொடர்பில் நியாயம் பெற்றுத்தருமாறு குறித்த கடித்தத்தில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், பாதிக்கப்பட்ட மாணவனை தாக்கியவர்கள் என அடையாளம் காணப்பட்ட நான்கு மாணவர்களுக்கு தற்காலிக வகுப்பு தடை விதிக்கப்பட்டுள்ளது.
Link: https://namathulk.com