யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு பிரதேசத்தில் வன ஜீவராசிகள் திணைக்களத்தினர் தமது ஆளுகைக்கு உட்பட்ட இடங்களை இன்று காலை பார்வையிட்டு இடங்களை எல்லைப்படுத்தி சென்றனர்.
தமது எல்லைப்பகுதிக்குள் அத்து மீறி நுழைபவர்களுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கபடும் என வன ஜீவராசிகள் திணைக்களத்தினர் இதன்போது கூறியுள்ளனர்.
தமது எல்லைகளுக்கு உட்பட்ட பிரதேசங்களில் அனுமதியுடன் கட்டடங்கள் அமைப்பதற்கு தாம் அனுமதி கொடுப்பதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
இந்நிலையில் தமது ஆளுகைக்கு உட்பட்ட இடங்களை உரிய நடைமுறைகளை பின்பற்றி விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
Link: https://namathulk.com