இந்தியன் ப்ரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் 12ஆவது போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
நேற்றையதினம் நடைபெற்ற குறித்த போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின.
போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற மும்பை இந்தியன்ஸ் அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது.
இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 16.2 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 116 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது.
இந்தநிலையில் 117 ஓட்டங்கள் எனும் வெற்றி இலக்கை நோக்கித் துடுப்பெடுத்தாடிய மும்பை இந்தியன்ஸ் அணி 12.5 ஓவர்கள் நிறைவில் 2 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து வெற்றி இலக்கை கடந்தது.
Link: https://namathulk.com