அம்பலாங்கொடை மற்றும் அம்பலாந்தொட்டை பொலிஸ் பிரிவுகளில் பதிவான தனித்தனி துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் தொடர்பாக இரண்டு சந்தேக நபர்களை பொலிசார் கைது செய்துள்ளனர்.
மார்ச் 14 ஆம் திகதி அம்பலாங்கொடை, இடம்தோட்டை பகுதியில் நடந்த ஒரு சம்பவத்தில் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டார்.
குறித்த, குற்றத்திற்கு உதவியதற்காக மீட்டியாகொடையைச் சேர்ந்த 31 வயது சந்தேக நபர் நேற்று கைது செய்யப்பட்டார்.
அதேவேளை, மார்ச் 31 ஆம் திகதி அதிகாலையில் அம்பலாந்தொட்டை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கோக்கல்லவில் உள்ள ஒரு வீட்டிற்குள் மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு அடையாளம் தெரியாத நபர்கள் ஒருவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர்.
இந்தக் குற்றத்துடன் தொடர்புடைய ஒரு சந்தேக நபர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.
சூரியவேவைச் சேர்ந்த 26 வயதுடைய நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
பொலிசார் மேற்படி சம்பவங்கள் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
Link: https://namathulk.com