நெளுக்குளம் மற்றும் மொரட்டுவ பொலிஸ் பிரிவுகளில் அடையாளம் காணப்படாத இரண்டு சடலங்கள் நேற்று கண்டெடுக்கப்பட்டுள்ளன.
நெளுக்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தம்பனையில் உள்ள புளியங்குளம் ஏரிக்கு அருகிலுள்ள காலி இடத்தில் அடையாளம் தெரியாத ஆண் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
இறந்தவரின் அடையாளம் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை.
சடலம் முல்லைத்தீவு வைத்தியசாலையின், பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இதற்கிடையில், மொரட்டுவ பொலிஸ் பிரிவின் கொரலவெல்ல பொல்வத்த பகுதியில் உள்ள கடற்கரையில் அடையாளம் தெரியாத ஆண் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
இறந்தவரின் அடையாளம் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை என பொலிசார் கூறினர்.
மேற்படி சம்பவங்கள் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிசார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Link: https://namathulk.com