ஈழத்தின் புகழ் பெற்ற எழுத்தாளர் தீபச்செல்வனின் சயனைட் நாவல் கிளிநொச்சியில் வெளியீடு.

Aarani Editor
1 Min Read
Book Launch

ஈழத்து எழுத்தாளர் தீபச்செல்வனின் சயனைட் நாவல், கடந்த சனிக்கிழமை மாலை 03.00 மணிக்கு கிளிநொச்சி நண்பர்கள் விருந்தகத்தில் தமிழ் தேசிய கலை இலக்கிய பேரவையினரின் ஏற்பாட்டில் யாழ் பல்கலைக்கழக கலை பீடத்தினுடைய பீடாதிபதி ரகுராம் அவர்களின் தலைமையில் வெளியீடப்பட்து.

குறித்த நிகழ்வில் பிரதம விருந்தினராக பாராளுமன்ற உறுப்பினர் திரு.சிவஞானம் சிறீதரன் அவர்கள் கலந்து கொண்டிருந்தார்.

முன்னாள் வடக்கு மாகாண கல்வி அமைச்சர் தம்பிராசா குருகுலராசா, கிளிநொச்சிமாவட்ட உதவி திட்டமிடல் அதிகாரி கேதீஸ்வரன், யாழ் பல்கலைக்கழக தமிழ் விரிவுரையாளர் அஜந்தகுமார், கிளிநொச்சி மாவட்ட தமிழ் சங்கத்தினுடைய தலைவர் பரமநாதப்பிள்ளை, மூத்த நாடக கலைஞர் ஏழுமலைப்பிள்ளை போன்றவர்களும் முன்னாள் போராளிகள், கலைஞர்கள், ஆர்வலர்கள், வாசகர்கள், பல்கலைக்கழக மாணவர்கள், வர்த்தகர்கள், ஆசிரியர்கள் என பலர் கலந்து கொண்டிருந்தனர்

குறித்த சயனைட் நாவலானது கடந்த வருடம் மார்கழி மாதம் சென்னையில் வெளியீடு செய்து வைக்கப்பட்டு பெரும் வரவேற்பையும் பெற்றிருந்தது.

Link: https://namathulk.com

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *