ஐஸ்லாந்து தலைநகரின் தெற்கே எரிமலை ஒன்று வெடித்துள்ளது.
இந்த எரிமலை வெடிப்பினால் சிவப்பு மற்றும் மஞ்சள் நிறங்களில் எரிமலைக்குழம்பு மற்றும் புகை வெளியேறியுள்ளது.
இதனால் சுற்றுலாப் பயணிகள் மற்றும் குடியிருப்பாளர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஐஸ்லாந்தில் 2021 ஆம் ஆண்டு முதல் ரெய்க்ஜாவிக் நகரின் தெற்கே 11 எரிமலைகள் வெடித்துள்ளன.
சுமார் 800 ஆண்டுகளுக்குப் பின்னர் செயலற்று இருந்த எரிமலைகள் செயற்பட ஆரம்பித்துள்ளன.
இந்நிலையிலேயே குறித்த எரிமலையும் செயற்பட ஆரம்பித்துள்ளதாக ஐஸ்லாந்து வளிமண்டலவியல் அலுவலகம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
link: https://namathulk.com/