அம்பாறை – இறக்காமம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நெய்னாகாடு, சாவாறு பகுதியில் நண்பருடன் கடற்றொழிலுக்குச் சென்ற நபரொருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
கடந்த 31ஆம் திகதி மாலை குறித்த மீனவர், நண்பருடன் கடற்றொழிலுக்குச் சென்ற நிலையில் காணாமல் போயிருந்தார்.
இந்தநிலையில், தனது கணவரைக் காணவில்லை என மனைவியினால் நேற்று காலை இறக்காமம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது.
குறித்த முறைப்பாட்டிற்கமைய விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன.
அத்துடன், பொலிசார் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் போது குறித்த மீனவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
கல்முனை – பாண்டிருப்பு பகுதியைச் சேர்ந்த 48 வயதுடைய நபரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
சடலம் பிரேத பரிசோதனைக்காக அம்பாறை பொது வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணையின் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும் என இறக்காமம் பொலிசார் தெரிவித்துள்ளனர்
Link: https://namathulk.com