யாழ்ப்பாணம், வடமராட்சி கிழக்கு கொடுக்குளாய் – இயக்கச்சி அபாய வெளியேற்ற பாதை புனரமைமைப்புக்கான தீர்மானம் இன்று காலை 10மணியளவில் சிறிய கலந்துரையாடலின் மத்தியில் எடுக்கப்பட்டுள்ளது.
இக் கலந்துரையாடலின் பின் வீதிப் புனரமைப்புக்கான அளவுத் திட்டங்களும் எடுக்கப்பட்டது.
பிரதானமாக கொடுக்குளாய் மல்வில் தீர்த்தக் கரையில் இருந்து ரீச்சா வரையுள்ள வீதிக்கான புனரமைப்புக்கான வேலைத்திட்டம் விரைவாக முன்னெடுக்கப்படும் என இக் கலந்துரையாடலில் தீர்மானிக்கப்பட்டது.
Link: https://namathulk.com