தனியார் துறையில் பணியாற்றும் ஊழியர்களுக்கான மாதாந்திர குறைந்தபட்ச ஊதியத்தை 27,000 ரூபாவாக உயர்த்துவதற்காக தற்போதுள்ள சட்டத்தை திருத்துவதற்கான திட்டங்களை தொழில் அமைச்சு அறிவித்துள்ளது.
போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் பிரதி அமைச்சர் பிரசன்ன குணசேன தனது பேஸ்புக் பதிவில் இந்த நடவடிக்கையை உறுதிப்படுத்தினார்.
அமைச்சரவை ஒப்புதலைத் தொடர்ந்து மே மாதத்தில் திருத்தங்கள் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என அமைச்சர் கூறினார்.
தற்போது, குறைந்தபட்ச ஊதியம் 21, 000 ஆக உள்ளது.
அத்துடன், எதிர்வரும் வருடங்களில் 35,000 ரூபாவாக அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது என அமைச்சின் செயலாளர் எஸ்.எம். பியதிஸ்ஸ தெரிவித்தார்.
Link: https://namathulk.com