யாழ் செம்மணி சித்துப்பாத்தி மயானத்தில் கண்டு எடுக்கப்பட்ட மனித எச்சங்கள் தொடர்பில் அகழ்வுப் பணிகளை மேற்கொள்வதற்கான நிதி ஒதுக்கீடு கிடைக்கப் பெறாத காரணத்தினால் எதிர்வரும் 4ஆம் திகதி வழக்கு விசாரணைக்காக திகதி இடப்பட்டுள்ளதாக முறைபாட்டாளர் சார்பில் ஆஜரான சட்டத்தரணி வி.எஸ் நிறஞ்சன் தெரிவித்தார்.
குறித்த வழக்கானது, நேற்று யாழ் நீதவான் நீதிமன்ற நீதிபதி ஏ.ஏ ஆனந்தராஜா முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
யாழ்ப்பாணம், மேல் நீதிமன்றம் ஊடாக நீதி அமைச்சுக்கு அகழ்வுப் பணி தொடர்பான நிதி ஒதுக்கீடு தொடர்பான விண்ணப்பம் தபால் மூலம் அனுப்பப்பட்டுள்ளது.
இந்நிலையில், குறித்த விண்ணப்பம் அமைச்சுக்கு கிடைக்கப் பெறாத காரணத்தினால் நிதி ஒதுக்கீடு தொடர்பில் உறுதியான தீர்மானம் மன்றுக்கு தெரிவிக்கப்படவில்லை.
சட்ட வைத்திய அதிகாரி செல்லையா பிரணவன் அகழ்வுப் பணிகளை மேற்கொள்வதற்காக பேராசிரியர் ராஜ் சோமதேவாவை அழைப்பது தொடர்பில் மன்றின் கவனத்திற்கு கொண்டு வந்தார்
Link: https://namathulk.com