உள்ளூராட்சி மன்ற தேர்தலை முன்னிட்டு போரதீவுப்பற்று பிரதேசத்தில் போட்டியிடும் கட்சிகளில் அகிம்சை முறையை பின்பற்றும் தமிழரசுக் கட்சியினைத் தவிர மற்றைய கட்சிகள் அனைத்தும் ஆயுத குழுவாக இருந்து ஜனநாயக முறைக்கு அமைய கட்சியாக மாறியுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் தெரிவித்தார்.
அத்துடன், தேர்தல் பரப்புரைகள் ஆரம்பித்து இருக்கும் நிலையில், அகிம்சை முறையை பின்பற்றும் தமிழரசுக் கட்சிக்கு அச்சுறுத்தல் விடுக்கும் முகமாக வேட்பாளரின் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசப்படுள்ளது எனவும் பாராளுமன்ற உறுப்பினர் கூறினார்.
இவ்வாறான பல சம்பவங்கள் பல இடங்களில் வேட்பாளருக்கும் எதிராக இடம்பெற்று வருவதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் சுட்டிக்காட்டினார்.
இவற்றினை கருத்தில் கொண்டு தேர்தல் ஆணையாளர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பாராளுமன்ற உறுப்பினர் கோரிக்கை விடுத்துள்ளார்.
Link: https://namathulk.com