ஜா-எல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஏகலவில் உள்ள செயிண்ட் மேத்யூஸ் வீதியில் நேற்று மாலை 24 வயதுடைய ஒருவர் கத்தியால் குத்திக் கொல்லப்பட்டார்.
நிதி தகராறு தொடர்பாக இரண்டு சகோதரர்களுக்கு இடையே ஏற்பட்ட கடுமையான வாக்குவாதத்தைத் தொடர்ந்து இந்த சம்பவம் நடந்ததாக பொலிசார் தெரிவித்தனர்.
மூத்த சகோதரர் தனது தம்பியை கூர்மையான ஆயுதத்தால் தாக்கியதில், குறித்த நபர் உயிரிழந்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பாக ஏகல பகுதியைச் சேர்ந்த 35 வயதுடைய சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
Link: https://namathulk.com