சீன இராணுவம் தாய்வானைச் சுற்றி 2ஆவது நாளாக போர் பயிற்சியில் ஈடுபட்டுள்ளது.
சீனாவிலிருந்து தனிநாடாக பிரிந்து சென்ற தாய்வானை மீண்டும் தன்னுடன் இணைக்க சீனா திட்டமிட்டுள்ளது.
இதற்காக தாய்வான் அருகே அடிக்கடி போர்ப்பயிற்சி மற்றும் தாய்வான் எல்லைக்குள் போர் விமானங்களை அனுப்பி சீனா பதற்றத்தை தூண்டுகிறது.
தாய்வான் எல்லைப் பகுதியில் சீனாவின் அத்துமீறல் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக தாய்வான் பாதுகாப்பு அமைச்சரகம் குற்றஞ்சாட்டி உள்ளது.
இந்நிலையில், தாய்வானை அச்சுறுத்தும் வகையிலும், தாய்வானைச் சுற்றியும் பாதுகாப்பு பயிற்சிகளை மேற்கொள்ளும் வகையிலும் தனது இராணுவம், கடற்படை மற்றும் விமானப்படையை சீனா அனுப்பியுள்ளது.
தொடர்ந்து 2ஆவது நாளாக தாய்வானைச் சுற்றி சீன இராணுவம் போர் பயிற்சியில் ஈடுபட்டுள்ளது.
இந்த பயிற்சியில் சீன கடற்படைக்கு சொந்தமான போர் கப்பல்கள் மற்றும் போர் விமானங்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
Link: https://namathulk.com/