கடமையில் ஈடுபடும் பொலிஸ் அதிகாரிகளுக்கு இடையூறு விளைவிபோருக்கு எதிராக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என இலங்கை பொலிஸ் திணைக்களம் அறிவித்துள்ளது.
திருகோணமலையில் அண்மையில் இடம்பெற்ற சம்பவத்தை அடிப்படையாக கொண்டு பொலிஸ் ஊடகப் பேச்சாளர் , சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் புத்திக்க மனதுங்க இந்த விடயத்தை கூறியுள்ளார்.
திருகோணமலை நிலாவேலி பகுதியில் போக்குவரத்து கடமைகளில் ஈடுபட்ட பொலிசாரின் கடமைகளுக்கு நேற்று இடையூறு விளைவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பான காணொளி சமூக வலைதளங்களில் பகிரப்பட்டுள்ளது.
கடமைகளுக்கு இடையூறு விளைவித்தவர்கள், பொலிசார் மீது தாக்குதல் மேற்கொளவும் முயற்சித்துள்ளனர்.
சம்பவத்துடன் தொடர்புடைய முக்கிய சந்தேகநபர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
ஏனைய சந்தேகநபர்கள் தப்பிச் சென்றுள்ள நிலையில் அவர்களை கைது செய்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
Link: https://namathulk.com