நிவாரணப் பொருட்களுடன் சென்ற சீனாவின் செஞ்சிலுவை சங்கத்தின் மீது மியான்மர் இராணுவம் துப்பாக்கிச் சூடு நடாத்தியுள்ளது.
கிழக்கு ஷான் மாநிலத்தில் இயந்திரத் துப்பாக்கிகளுடன் ஒன்பது வாகனங்கள் கொண்ட தொடரணியை இராணுவத் துருப்புக்கள் சுட்டதாக ஆயுதமேந்திய கிளர்ச்சிக் குழுவான தாங் தேசிய விடுதலைப் படை தெரிவித்துள்ளது.
கடந்த வெள்ளிக்கிழமை ஏற்பட்ட 7.7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தின் மையப்பகுதிக்கு அருகில் கடுமையாக பாதிக்கப்பட்ட நகரமான மண்டலேவுக்குச் செல்லும் பாதையில் இந்த வாகன தொடரணி சென்று கொண்டிருந்தது.
இதன்போது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது .
இந்த சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக மியன்மாரின் இராணுவ ஆட்சிக்குழு தெரிவித்துள்ளது.



Link: https://namathulk.com/