கடந்த 14ஆம் திகதி சபையில் சமர்ப்பிக்கப்பட்ட பட்டலந்த வீட்டுத் தொகுதியில் சட்டவிரோத தடுப்பு முகாம் மற்றும் சித்திரவதை முகாம் அமைத்து அவற்றை நடத்திச் சென்றமை தொடர்பான விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கை குறித்த விவாதத்தை எதிர்வரும் 10ஆம் திகதி நடத்துவதற்கு சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்ன தலைமையில் தீர்மானிக்கப்பட்டது.
இன்று நடைபெற்ற பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவிலேயே இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
அத்துடன், இதற்கான இரண்டு நாள் விவாதத்தில் பிறிதொரு நாளை மே மாதத்தில் ஒதுக்குவதற்கும் இங்கு தீர்மானிக்கப்பட்டது.
Link: https://namathulk.com