பற்றாக்குறையின்றி அரிசி விநியோகத்தை உறுதி செய்ய அரசாங்கம் நடவடிக்கை

Aarani Editor
1 Min Read
அரசாங்கம்

நுகர்வோருக்கு தட்டுப்பாடு இல்லாமல் அரிசியை வழங்கும் நோக்கில், எதிர்காலத்தில் அரிசியை இறக்குமதி செய்ய உணவுக் கொள்கை மற்றும் பாதுகாப்புக் குழு பரிந்துரைத்துள்ளது.

உணவுக் கொள்கை மற்றும் பாதுகாப்புக் குழு நேற்று ஜனாதிபதி செயலகத்தில் வர்த்தக, வணிக, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்க தலைமையில் 5வது முறையாகக் கூடியது.

இதன்போது, அறுவடை நடந்து கொண்டிருந்தாலும், தற்போது சந்தையில் அரிசியின் விலையில் அதிகரிப்பு இருப்பதாகவும், சந்தையில் சில வகையான அரிசிகளுக்கு பற்றாக்குறை இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

அதன்படி, போதுமான அளவு அரிசி இருப்புகளைப் பராமரிப்பதற்காக அரிசியை இறக்குமதி செய்வதில் அமைச்சரவை கவனம் செலுத்துவது குறித்து விவாதங்கள் நடத்தப்பட்டன.

இந்த ஆண்டு கனமழை காரணமாக இரண்டு முறை பயிர் சேதம் ஏற்பட்டதால் எதிர்பார்க்கப்பட்ட அறுவடை கணிசமாகக் குறைந்துள்ளதாக குழுவில் கூறப்பட்டது.

கால்நடை தீவனத்திற்காக அரிசியை ஒழுங்கற்ற முறையில் பயன்படுத்துவது அரிசி பற்றாக்குறைக்கு மற்றொரு முக்கிய காரணம் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், கால்நடை உற்பத்தித் துறையில் கால்நடை தீவனத் தேவைகளுக்காக உடைந்த அரிசியை இறக்குமதி செய்வது மற்றும் மாற்று தீவனத்தைப் பயன்படுத்துவது குறித்து குழுவில் கவனம் செலுத்தப்பட்டது.

Link: https://namathulk.com

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *