கம்பஹா, உக்கல்கொட பகுதியில் தற்செயலாக இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயமடைந்துள்ளார்.
போக்குவரத்து கடமையில் ஈடுபட்ட பொலிசாரால் வழங்கப்பட்ட உத்தரவை மீறி ஒருவர் மோட்டார் சைக்கிளை வேகமாக செலுத்தியுள்ளார்.
இதன்போது பொலிசார் அவரைத் துரத்திச் சென்று தடுத்துள்ளனர்.
பொலிசாரின் கட்டளையை மீறி பயணித்தமையால் அவரை கைது செய்ய பொலிசார் முயற்சித்த போது கைகலப்பு ஏற்பட்டுள்ளது.
இதன்போது பொலிஸ் ஒருவரின் துப்பாக்கி தற்செயலாக இயங்கியதில் குறித்த நபரின் காலில் காயம் ஏற்பட்டது.
காயமடைந்த நபர் கம்பஹா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
Link: https://namathulk.com